சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5730.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 அதிகரித்து ரூபாய் 45840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் சவரன் ரூ.46 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6200.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49600.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 79.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79400.00 எனவும் விற்பனையாகி வருகிறது