இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

Mahendran

புதன், 22 அக்டோபர் 2025 (15:56 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான கய்மூர் மோகனியா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஸ்வேதா சுமன் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
2020 தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தை சொந்த ஊராக குறிப்பிட்ட அவர், 2025 தேர்தலில் பீகாரை வசிப்பிடமாக காட்டியதே இதற்கு காரணம். பாஜகவின் புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
தனது வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஸ்வேதா சுமன் அறிவித்துள்ளார். மேலும், இந்த முடிவுக்கு பின்னால் "டெல்லியின் அழுத்தம்" இருப்பதாகவும், அதிகாரிகள் உதவியற்ற நிலையில் செயல்பட்டதாகவும் அவர் தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
அதேபோல் பாஜக வேட்பாளரின் மனுவில் குறைபாடுகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்