சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (11:38 IST)
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த நான்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதியில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இது தமிழக கடலோரத்தை ஒட்டி நீடிப்பதால் தமிழகத்தில் தற்போது பல பரவலாக மழை பெய்து வருவதாகவும்  இன்று மதியம் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்