கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த நிகழ்வையும் நடத்தாத அரசு, 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு முன் இப்போது 'ஐயப்ப சங்கமம்' மாநாட்டை நடத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கேரள காங்கிரஸ் கட்சியின் சதீசன் விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கை என்று நிராகரித்தார். "அவர்களுக்குள்ளேயே கவலை இருப்பதால், இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு இணைந்து செப்டம்பர் 20 அன்று பம்பாவில் 'உலக ஐயப்ப சங்கமம்' மாநாட்டை நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.