தொடர்ந்து 3 ஆண்டுகள் போராட்டிகள் நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக பேராடினார்கள். இந்த போராட்டம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் நடந்தது. மேலும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, என அத்தனை மாவட்டங்களிலும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள். இது மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினார்கள். இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்தது இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளில் சென்னை உள்பட எல்லா நகரங்களிலும் மிகப்பெரிய வன்முறை நடந்தது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.