ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:55 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதிகள் உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ’ஜெயலலிதா ஐந்து முறை முதலமைச்சராக இருந்ததாகவும், சினிமா துறையில் விருதுகள் பெற்றிருந்ததையும்’ குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். "யார் யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர்.
அடுத்த கட்டுரையில்