பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவில், "அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம்" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநகர காவல் துறை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.