சுசிகணேசனின் மிரட்டல்களுக்கு பயப்படவில்லை - லீனா மணிமேகலை பேட்டி

செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:45 IST)
இயக்குனர் சுசிகணேசன் மீது தான் கொடுத்த பாலியல் புகார் அனைத்தும் உண்மை என எழுத்தாளர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

 
கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறினார்  இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டே தான் சந்தித்த பாலியல் அத்துமீறலை பெயர் குறிப்பிடாமல் அவர் பதிவு செய்திருந்தார். அதை தற்போது டிவிட்டர் பக்கத்தில் அவர் மீ டூ ஹேஷ்டேக்குடன் சுசி கணேசனின் பெயரையும் சேர்த்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இதற்கு இன்று மறுப்பு தெரிவித்த இஅயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலை சொல்வதனைத்தும் பொய் என நிரூபிக்கும் ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும், தன்னிடம் மன்னிப்பு கோராவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று மாலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பை லீனா மணிமேகலை நடத்தினார். அதில் பேசிய லீனா “சுசி கணேசன் பற்றி நான் கூறியது அனைத்தும் உண்மை. எனவே, அவரின் மிரட்டல்களுக்கு பயப்படப்போவதில்லை. அவரது பேச்சில் ஆணாதிக்கமே அதிகம் தெரிகிறது. அவரது விளக்கத்தை படிக்கும் போதே, அவர் அப்படிப்பட்டவர்தான் என நம்மை நம்ப வைக்கிறது. இவ்வளவு புத்தகங்கள் எழுதி, ஆவணப்படங்களை எடுத்து உலகம் முழுக்க திரையிட்ட என்னையே அவர் மிரட்டுகிறார் எனில், அப்படிப்பட்ட சிந்தனையை இந்த சமூகம் ஆணுக்கு கொடுத்துள்ளது. 
 
15 வருடங்கள் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளேன். 2017ம் ஆண்டு கேரளை நடிகை சந்தித்த பிரச்சனையையே நானும் சந்தித்தேன். இப்போது ஏன் பேசுகிறீர்கள்? என கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என எங்களுக்கும் தெரியும். எங்களைப் போல் மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இப்போது கூறுகிறோம். மீ டூவின் அடிப்படை புரிதல் பல ஆண்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்