ஆன்லைனில் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப் பட்டாசுகள் விற்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாடியிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்யும் நோக்கில்தான் ஆன்லைனில் பட்டாசுகளை விற்க அனுமதி கேட்டிருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் குறிப்பாக சிவகாசி யில் அதிகளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கௌம் விதத்தில் இந்த ஆன்லைன் விற்பனையை நீதிமன்றம் ஆதரிக்குமா? இல்லை ஏழைக்குடிசை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவன தீர்ப்பளிக்குமா? என்ற இந்த வழக்கின் உண்மை தன்மை வரும் நவம்பர் 15 ம் தேதி தெரிந்துவிடும்.