20 லிட்டர் குடிநீர் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகள், அலுவலகங்களில் தற்போது 20 லிட்டர் குடிநீர் கேன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும், 20% அதிகமாக கீறல்கள் மற்றும் அழுக்கு நிறைந்த குடிநீர் கேன்களை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்வுத்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.
மேலும், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் குடிநீர் உற்பத்தி அளவுகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும், ஆய்வின் போது குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது...