ஈரப்பதம் குறைந்த காற்று வீசுவதாலும், கடல் காற்று தாமதமாக வீசுவதாலும் மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னையில் வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், “மேற்கு திசையில் இருந்து காற்று வீசவேண்டும். ஆனால் அவ்வாறு வீசப்படும் காற்றில் ஈரப்பதம் மிக குறைவாக உள்ளது. மேலும் மேகமும் இல்லை. கடல் காற்று மிக தாமதமாக இரவில்தான் வீசுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வானிலை அடுத்த 3 நாட்களுக்கு மட்டும்தான் தெரியும். அடுத்து 3 நாட்கள் கழித்து கணக்கிட்டு பார்த்துதான் அடுத்து வெப்பம் எப்படி இருக்கும் என்று கூற இயலும்” என்று தெரிவித்துள்ளனர்.