மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு: 3 பேர் முதலிடம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (09:25 IST)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வெளியிட்டார். இதில் மூன்று பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.


 
 
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 2723 இடங்கள் உள்ளன. 2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளில் 130 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிடிஎஸ் படிப்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1055 இடங்கள் உள்ளன.
 
நடப்பாண்டில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள 27450 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வெளியிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா, திருவையாறு விக்னேஷ், திருவள்ளூர் கனகவேல் ஆகியோர் 200-200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.
 
முதல்கட்ட கலந்தாய்வு 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்ள www.tnhealth.org என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்