நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

Mahendran

செவ்வாய், 6 மே 2025 (11:59 IST)
நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் எங்கே போர் ஒத்திகை நடைபெற உள்ளது என்பது குறித்து ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
 
இதனை அடுத்து, தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலை ஆகிய இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
போர் பாதுகாப்பு ஒத்திகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்