மதுரையைச் சேர்ந்த சரண்யா, தனது முதல் கணவர் சண்முகசுந்தரம் இறந்த பின்னர், இரண்டாவது திருமணமாக பாலன் என்பவரை திருமணம் செய்து, குடும்பத்துடன் உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார். தம்பதிகள் அங்கு ஒரு பயண நிறுவனம் மற்றும் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு, பாலன் மற்றும் அவரது மகன்கள் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்யா நடந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த வழியிலேயே, ஒரு சந்துப் பகுதியில் திடீரென வன்முறை தாக்குதலுக்கு ஆளாகி, கழுத்து மற்றும் பின்பக்கத்தில் வெட்டப்பட்டு சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.