அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னுடைய 38-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் விஷால்.
திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரம் வழங்கினார். அப்போது ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை எனவும் விஷாலை பெயர் வைக்குமாறும் கூறினார்.
பெயர் வைக்க கையில் கொடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தை என்பதை அறியாமல் விஷால் உடனடியாக தன்னுடைய பெயரான விஷால் என்பதை வெச்சிருவோம் என கூறியுள்ளார்.
உடனே குழந்தையின் பெற்றோர் பிறந்திருப்பது பெண்குழந்தை என கூற, அப்டினா விஷால் தேவின்னு வெச்சுட்டாப் போச்சு என்று சமாளித்துள்ளார் விஷால்.