லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை காண பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு.. பொதுமக்களுக்கு அனுமதி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (10:21 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று மாலை ஆறு நான்கு மணிக்கு தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியர்கள் தலை நிமிர வைக்கும் இந்த சாதனை இன்னும் சில மணி நேரத்தில் நிகழ உள்ளது.
 
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சியை காண்பதற்கு பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியகி உள்ளது.
 
இதனை நேரடியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்று மாலை 6 மணிக்கு விக்ரம் லேண்டர் தரி  இயங்குவதை நேரில் காண விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பிர்லா கோளரங்கம் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்