விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். ஆனால்....?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (14:10 IST)
பிரச்சாரக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் எனவும் கூட்டதில் விஜயகாந்த் பேசமாட்டார் எனவும் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது பாமகவுக்கு ஒதுக்கியதைப் போல தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென தேமுதிக முரண்டு பிடித்தது. இதனால் அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்தது. சமீபத்தில் 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. 
 
இந்நிலையில் தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பேசுகையில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலையொட்டி கேப்டன் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்வார். ஆனால் கூட்டத்தில் அவர் பேசமாட்டார். உடல்நலம் தேறிவரும் அவர் நலம்பெற்று பழையபடி மக்களிடையே பேசுவார் என சுதீஷ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்