அதிமுகமற்றும்தேமுதிகஇடையிலானக்கூட்டணிப்பேச்சுவார்த்தையைஉறுதிசெய்யும்விதமாகமூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைஇன்றுதலைமைக்கட்சிஅலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடக்க இருக்கிறது.
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் கடந்த வாரத்தில் தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் இருந்து திமுக இப்போது விலகிக் கொண்டது.
எனவே அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிக்கே சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் மேற்கொண்டார் விஜய்காந்த். சிகிச்சைக்குப் பின்னர் முதல்முறையாக இப்போதுதான் கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக மற்றும் தேமுதிக இடையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிவுற்று விட்டாலும் தேமுதிக கேட்கும் 7 சீட்களைக் கொடுப்பதுதான் அதிமுகவிற்கு இருக்கும் மிகப்பெரியத் தலைவலியாக இருந்து வருகிறது. ஏற்கனவே பாமக மற்றும் பாஜக ஆகிய இருக் கட்சிகளுக்கு 12 தொகுதிகளை வாரி வழங்கி விட்டது. இப்போது தேமுதிக விற்கு 7 தொகுதிகள் என்றால் மொத்தமாக 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே தாரை வார்த்தாக வேண்டும். இப்போது அதிமுக சார்பில் 37 எம்,பிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திரும்ப தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஆசையோடு உள்ளனர். மேலும் அதிமுக விலேயே சில புது வேட்பாளர்களும் போட்டியிட நினைத்து விருப்பமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எப்படி மீதமிருக்கும் தொகுதிகளை மட்டுமே வைத்துக்கொண்டு சீட் கொடுப்பது என அதிமுக குழம்பி வருகிறது.
ஆனால் 7 சீட் என்பதில் உறிதியாக இருக்கிறது தேமுதிக. பாமகவை விட தாங்கள் கம்மியாக சீட் வாங்குவது தங்களக்கு ஏற்படும் கௌரவப் பிரச்சனை என நினைக்கிறது. அதனால் 7 சீட்டிலேயேக் குறியாக இருக்கிறது. அதிமுக வோ 5 சீட் மற்றும் 150 கோடி ரூபாய் தேர்தல் நிதி என ஆஃபர் ஒன்றைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்காக தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்றையப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.