உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மழைநீரை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
குறிப்பாக முதல்வர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய மக்கள் தூங்காமல் உள்ளனர் என்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்
சென்னை மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழை நீரை வெளியேற்ற முடியாமல் உள்ளது என்றும் ஒருபுறம் மெட்ரோ பணிகள் காரணமாகவும் இன்னொருபுறம் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாகவும் சென்னை முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது சென்னை மழையால் சென்னை மக்கள் பெரும் அவதியில் உள்ளனர் என்றும் இதனை அடுத்து மழைநீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்