நிர்மலாதேவி விவகாரத்தில் பசுத்தோல் போர்த்திய புலிகள் யார்: விஜயகாந்த்

வியாழன், 19 ஏப்ரல் 2018 (09:48 IST)
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி என்பவர், அக்கல்லூரியின் மாணவிகளை தவறாக நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆடியோவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த நிலையில் நிர்மலாதேவி வெறும் அம்புதான் என்றும் அவரை ஏவிய பெரிய மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன,
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பதுங்கியுள்ள பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காண வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் பசுந்தோல் புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாத வகையில் நிர்மலாதேவிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்