இந்திய அளவில் ட்ரெண்டாகும் #தமிழகவெற்றிகழகம்.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்..!

Mahendran

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (14:04 IST)
நடிகர் விஜய் சற்றுமுன் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் மூன்று பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் என்பது தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யும் சேவை என்றும் கூறியுள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜய்யின் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஒரு தூய அரசியல்வாதி வரமாட்டாரா? என ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு விடிவெள்ளியாக விஜய் வந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது,
 
இந்த நிலையில் விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டர் இணையதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான ட்விட்டுக்கள் இதுகுறித்து பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மொத்தத்தில் விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் மாஸ் காட்டி வருகிறார்கள்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்