கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அடுத்தது பிரமாண்டமான மாநாடு.. விஜய்யின் மாஸ் திட்டம்..!

Mahendran

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (13:58 IST)
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் என்பதையும் பார்த்தோம் 
 
மேலும் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமாக அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்சி பெயரை அறிவித்ததை அடுத்து பிரமாண்டமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் மாவட்டம் முதல் ஒன்றியம் வரை நிர்வாகிகள் தேர்வு, சார்பு அணி நிர்வாகிகளை நியமனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது
 
 மேலும் மற்ற நடிகர்கள் போல் ஒரு பக்கம் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அரசியலுக்கு வராமல் முழுமையாக அரசியலில் ஈடுபட விஜய் எடுத்த முடிவை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்