மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய் மக்கள் இயக்கம்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (14:02 IST)
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில்,  ஏற்கனவே ' அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்'' , ''சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கெளரவப் படுத்த வேண்டும்'' என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  தளபதி விஜய் மக்கள் இயக்கம்  சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதுபற்றி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்  சமூக வலைதள பக்கத்தில்,

‘’தளபதி  அவர்களின் சொல்லுக்கிணங்க, தேசத் தந்தை #மகாத்மாகாந்தி அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு.!

தளபதி விஜய் மக்கள் இயக்கம்  சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.!

மேலும் வடபழனியில் உள்ள #தியாகி திரு.ஜோதி N.கண்ணன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தியாகி அவர்களுக்கு வேட்டி மற்றும் சட்டை வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், வட்டம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்