இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
''தமிழ்நாடு என்ற பெயர் எத்தனை ஆண்டுகள் இருக்குமோ அத்தனை ஆண்டுகளும் நான் தான் ஆள்கிறேன் என்று பொருள் என்று அண்ணா கூறினார். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பெண்கள் எத்தனை ஆண்டுகள் பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள்'' என்று கூறினார்.
அதில், ''ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டும்'' என்றும் 1.06 கோடி பயனாளிகளுக்கு இம்மாதத்திற்கான தொகை வரவு வைக்கப்பட்டும் இதை வங்கிகள், ஏடிஎம் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்'' தெரிவித்துள்ளார்.