தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை முடிவடைந்து நேற்று வேட்பாளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் தேர்தல் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பலரும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்க தலைவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் “நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்தே போட்டியிடுகிறது. வேறு எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தரவில்லை. விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்காக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.