ஆட்டோ சின்னத்தை தட்டித்தூக்கிய விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள்
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:38 IST)
விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் பலர் ஆட்டோ சின்னத்தை தட்டி தூக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் பதிவு செய்யாததால் அந்த கட்சியின் நிர்வாகிகள் கேட்ட ஆட்டோ சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது
ஆனால் அதே நேரத்தில் சுயேட்சை சின்னத்தில் ஆட்டோ சின்னம் இருப்பதை அடுத்து பெரும்பாலான விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் ஆட்டோ சின்னத்தை கேட்டுப் பெற்று உள்ளனர்
ஒரு சில விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு மட்டும் குடை மற்றும் உலக உருண்டை சின்னங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
ஆட்டோ சின்னம் கிடைத்த வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.