கரூர் மரணங்களுக்கு விஜய்தான் முதல் காரணம்! - சீமான் பகிரங்க குற்றச்சாட்டு!

Prasanth K

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (12:58 IST)

கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு விஜய்யே முதல் காரணம் என சீமான் பேசியுள்ளார்.

 

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் “இது யாருமே எதிர்பார்த்திராத துயர சம்பவம். இதை விஜய்யுமே எதிர்பாத்திருக்க மாட்டார். அவருமே மிகுந்த மன வருத்தத்தில் இருப்பார்” என பேசியிருந்தார்.

 

இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் பேசிய சீமான் “தேர்தல் வருவதால் பாஜக எம்பிக்கள் குழு கரூர் வந்துள்ளனர். தூத்துக்குடி சம்பவத்தின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி. 

 

கரூரில் 41 பேர் மரணித்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய்யே முதல் காரணம். 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்காமலே அந்த வீடியோவில் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அமர்ந்திருக்கக் கூடிய முதல்வர் என்ற நாற்காலியை மதிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்