காத்து வாங்கும் ‘இட்லி கடை’? விஜய் வீடியோதான் காரணமா?

Prasanth K

புதன், 1 அக்டோபர் 2025 (11:09 IST)

இன்று தனுஷின் ‘இட்லி கடை’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில் முதல் நாளே பல காட்சிகள் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனுஷ் நடித்து, இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முதன்முறையாக ரெட் ஜெயண்ட்ஸ் சார்பாக உதயநிதி மகன் இன்பன் உதயநிதி வழங்குகிறார்.

 

இந்த படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் பல காட்சிகள் படம் திரையிடப்பட்டுள்ளபோதிலும் ஓரளவே காட்சிகள் நிறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு சில மல்டிப்ளெக்ஸ் தவிர சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களிலேயே கூட்டம் இல்லை என ஆன்லைன் புக்கிங் தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் வைரலாகி வருகிறது.

 

இன்று ஆயுத பூஜை என்பதால் மக்கள் வீடுகளில் பல வேலைகளில் இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் குறைவாக வந்திருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் நேற்று கரூர் துயரத்தில் விஜய் திமுகவை குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வழங்குவதால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை புறக்கணித்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல் பரவி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்