விஜய்யின் கவனத்தை ஈர்க்க அவரது கட்சியினர் செருப்பு வீசியிருக்கலாம்: செந்தில் பாலாஜி விளக்கம்..!

Siva

புதன், 1 அக்டோபர் 2025 (13:55 IST)
விஜய்யின் கவனத்தை ஈர்க்க அவரது கட்சியினர் செருப்பு வீசியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, சில வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். அப்போது, விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
 
"வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்த அடுத்த நாளில் 2,000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. காலி தண்ணீர் பாட்டில் ஒன்றையாவது நீங்கள் பார்த்தீர்களா? விஜய்யின் கவனத்தை ஈர்க்க தொண்டர்கள் யாராவது செருப்பு வீசி இருக்கலாம்."
 
"தொண்டர்கள் முதலில் விஜய்யிடம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். மக்கள் மயங்கி விழுந்த பகுதியில் இருந்து மாலை 6 மணிக்கு முதல் செருப்பு வீசப்பட்டுள்ளது."
 
"விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது. ஆனால், என்னை பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார். நான் அவர் பெயர் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலைப் பரப்புகின்றனர்," என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
 
மேலும், அவர் பேசியபோது, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்சினையே நடந்திருக்காது. கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. த.வெ.க.வினர் தனது கடமையை சரிவர செய்யவில்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்