சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது அவர் தனது அரசியல் பிரவேசம், அரசியல் கட்சி குறித்தும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தேதி குறித்தும் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை நாம் தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது
சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்தும் அரசியல் பிரவேசம் குறித்தும் அவர் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கமொத்த ஜனங்களின் ஒத்த எதிர்பார்ப்பு, அண்ணா உங்கள் குட்டி கதையால் அரசியல் வருகையை உறுதியாக்கு” என்ற வசனங்கள் உள்ளது
இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் குறிப்பிட்டபடி அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை மாஸ்டர் படத்தின் ஆடியோ விழாவில் விஜய் அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்