சீனாவில் 3,000, இத்தாலியில் 800: கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (08:15 IST)
கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பரபரப்பு
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீனா முழுவதும் பரவி தற்போது உலகம் முழுவதும் 123 நாடுகளுக்கு பரவி விட்டதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169 ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது 
 
சீனாவை அடுத்து அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இத்தாலி நாட்டில் தான் என்றும், இதுவரை மொத்தம் இத்தாலியில் மட்டும் 827 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
மேலும் உலகம் முழுவதும் பரவலாக கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4627 ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இருப்பினும் கொரோனா வைரஸால் 68 ஆயிரத்து 640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வெளிவந்துள்ள ஒரே ஒரு செய்தி மட்டும் ஆறுதலான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்