மக்கள் திலகத்தின் மறு உருவமே! அடங்காத விஜய் ரசிகர்கள்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (10:42 IST)
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விஜய்யை எம்.ஜி.ஆருடன் சித்தரித்து தொடர்ந்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக நடிகர் விஜய் ரசிகர்கள் அடிக்கடி எம்.ஜி.ஆர் புகைப்படங்களில் விஜய்யை இணைத்து போஸ்டர்கள் ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மதுரையில் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு விஜய்யை எம்ஜிஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து ஒட்டிய போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “எம்ஜிஆர் கெட்டப் போட்டால் மட்டும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என பேசியிருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்திலும் எம்ஜிஆரின் புகழ்பெற்ற வேடங்களில் விஜய்யின் முகத்தை மார்பிங் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ”மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்