இலவசமாக தக்காளி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (18:04 IST)
தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் விழுப்புரம் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் இலவசமாக பொதுமக்களுக்கு தக்காளி வழங்கியதை எடுத்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். 
 
விஜய் மக்கள் இயக்கத்தினர் அவ்வப்போது சமூக சேவை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்ற நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் சமூக சேவை அதிகரித்து வருகிறது. 
 
இந்த நிலையில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆகி வரும் நிலையில் விழுப்புரம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளியை வழங்கினார். 
 
இந்த தக்காளியை வாங்க பொதுமக்கள் போட்டி போட்ட நிலையில் தக்காளி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்