தக்காளியை எல்லோரும் வீட்டில் வளர்த்தால் விலை குறைந்துவிடும்: உபி அமைச்சரின் பலே ஐடியா..!

திங்கள், 24 ஜூலை 2023 (11:12 IST)
தக்காளியை எல்லோரும் வீட்டில் வளர்த்தால் தக்காளி விலை குறைந்து விடும் என உத்தர பிரதேசம் மாநில அமைச்சர் ஒருவர் ஐடியா கொடுத்துள்ளார். 
 
தக்காளி விலை கடுமையாக விலை உயர்ந்து வருவதை அடுத்து தக்காளியை வாங்க பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் தக்காளி விலை அதிகமாக இருந்தால் மக்கள் அதை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றும் உத்தரபிரதேச பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் பிரதிபா சுக்லா பேசியுள்ளார். 
 
அதேபோல் தக்காளிக்கு பதிலாக எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம் என்றும் யாருமே தக்காளி சாப்பிடவில்லை என்றால் விலை குறைந்து விடும் என்றும் தெரிவித்தார்.  
 
ஏற்கனவே பாஜக பிரமுகர் எச் ராஜா தக்காளியை நான்கு நாட்கள் அனைவரும் வாங்காமல் இருந்தால் தானாக விலை குறைந்து விடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்