விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்தது...

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:04 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள்  தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்போது தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாகவும் அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஏதும் எழுதி உள்ளாரா ?என்பது குறித்து தேடுதல் செய்து வருவதாக தகவல் வெளியாகும் நிலையில் விஜய் ஆண்டனியின் தாயாரிடம் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை நடைபெற்ற ஓமந்தூரார் மருத்துவமனையில் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் இருந்தனர்.

அரைமணி    நேரம் பிரேதபரிசோதனை நடைபெற்றது. அதன்பிறகு, விஜய் ஆண்டனியிடம் போலீஸார் கையெழுத்து பெற்றுள்ளனர். விரைவில் அவர்களிடம் மீராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு மீராவின் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் மீராவின் உடலை வைக்கவுள்ளதாகவும், அதன்பின்னர், மாலை 5  மணியளவில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள  கல்லறையில் மீராவின் உடலை புதைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்