செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (13:57 IST)
சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த துவக்க விழா வீடியோ அனைத்து திரையரங்குகளிலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்