பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்- டிடிவி. தினகரன்

Sinoj

வியாழன், 4 ஜனவரி 2024 (13:57 IST)
ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என  டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமமமுக பொதுச்செயலாள டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளதாவது:

''தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 369 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், அம்மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்து, எழுத்துத் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேர்வாணையம் முழுவீச்சில் தயாராகி வருவது கண்டனத்திற்குரியது.
 
அரசுப் பணிக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்