தமிழக அரசை பாராட்டிய துணை குடியரசுத் தலைவர் !

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (17:03 IST)
இந்தியாவில் 19984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 640 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, கொரொனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக அவர் பாராட்டியுள்ளார்.

இன்று காலை துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசினார், அப்போது, கொரொனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார். மேலும், கொரொனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக அவர் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்