இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 'புரட்சி கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி டாக்டர் திருமதி விஜயலட்சுமி துரைராஜ் அவர்கள் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். அவருடைய இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெற உள்ளது. அவரின் இழப்பு கேப்டன் குடும்பத்திற்கு பெரும் இழப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது