வேந்தர் மூவீஸ் மதன் எழுதிய கடிதம் : வாட்ஸ் ஆப்பில் பரபரப்பு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (13:02 IST)
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மாதம் 29ஆம் தேதி, காசியில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானர்.


 


அவரை, அவரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தேடி வந்தனர். ஆனால் ஒரு மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் கைப்பட எழுதியுள்ள கடிதம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 
புதுச்சேரி ராஜகோபால், ஸ்ரீபாலாஜி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை நடத்திவருகிறார். 
 
சமீபத்தில், அந்தக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டுக்கு வழங்குவதற்கு  ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.. இதனையடுத்து, கடந்த 24ம் தேதி, வருமானவரித்துறை அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.52 கோடிகளைக் கைப்பற்றப்பட்டது.
 
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ராஜகோபாலுக்கு மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதன், எஸ்.ஆர். குழுமத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரபல தனியார் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை ஏஜென்டாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது.
 
இதை உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரி ராஜகோபாலுக்கும் மதன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அந்த கடிதத்தில்  “ நான் போகிறேன். நான் உங்களுக்கு அனுப்பியுள்ள லிஸ்டின் படி மாணவர்களுக்கு அட்மிஷன் கொடுக்க வேண்டும். உங்களுடைய வங்கிக் கணக்கில் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டேன். உங்களால் அதை மறுக்க முடியாது. உங்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன் என்று உங்களுக்கு தெரியும். மாலதி மேடமும் மூலம் வந்த அட்மிஷனும் என்னுடையதுதான். அந்த இரண்டு மாணவர்களுக்கும் கல்லூரியில் அட்மிஷன் கொடுக்க வேண்டும். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கடிதம் அவர் மாயமாவதற்கு முன் எழுதியதாக தெரிகிறது. அதாவது அவர் மொத்தம் மூன்று கடிதங்கள் எழுதியுள்ளார். ஒன்று எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு. மற்றொன்ரு ராஜகோபாலுக்கு. மூன்றாவது கடிதம் அவரின் சினிமா நண்பர்களுக்கு என்று தெரிய வந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்