வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது. தீவிர புயலாக உருவெடுத்த நிவர் கரையை தொடும் முன்னர் அதி தீவிர புயலாக மாறி மணிக்கு 145 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதாரமடைந்துள்ளதுடன், ஏகபட்ட மரங்களும் சாய்ந்துள்ளன.
இந்நிலையில் தீவிர புயலாக இருந்த நிவர் கரையை கடந்துள்ள நிலையில் வலுவிழந்து புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்கு தாழ்வு பகுதியென மெல்ல குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.