வேலூரில் மீண்டும் லேசான நில அதிர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

புதன், 22 டிசம்பர் 2021 (09:10 IST)
வேலூரில் கடந்த சில தினங்களில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களுக்குள் இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. லேசான நில அதிர்வுகள் என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு போன்ற எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்