கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது அதிகபட்ச வாக்கு வித்தியாசங்களில் இருந்தது. அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி, கள்ளக்குறிச்சியில் கவுதம் சிகாமணி, காஞ்சிபுரத்தில் செல்வம், மயிலாடுதுறையில் ராமலிங்கம், நாமக்கல்லில் சின்னராஜ், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துகுடியில் கனிமொழி, திருவண்ணாமலையில் அண்ணாதுரை ஆகியோர் சுமார் 2 முதல் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். குறிப்பாக டி.ஆர்.பாலு, சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், கலாநிதி வீராச்சாமி 4.61 வாக்கு வித்தியாசத்திலும், வேலுச்சாமி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.