தபால் வாக்குகள் எண்ண தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலையில் இருந்தது. 11 மணிக்கு மேல் திமுக வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்த சுற்றுகளில் திமுக கணிசமான வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்க தொடங்கியது. எனினும் 10000 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே இரண்டு கட்சிகளும் நீடித்து வந்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் வலுவாக இருந்தது.
21 சுற்று முழுவதுமாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையே 8,141 வாக்குகளே வித்தியாசம் இருந்தது.