ஆர்.கே.நகரை ரவுண்டு கட்டிய போலீஸ்: எப்படி பணம் உள்ளே போகும்?

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (06:50 IST)
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவித்தபோது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.500 முதல் ரூ.5000 வரை கொடுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதுமாதிரி எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து கண்காணிக்கின்றது.

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் போலீசாரால் ரவுண்டு கட்டப்பட்டன. போலீசை மீறி ஒரு சைக்கிள் கூட செல்ல முடியாதாம். 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு, வாகன சோதனை ஆகியவை கடுமையாக நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளதால் ஆர்.கே.நகரில் எப்படி பணம் உள்ளே போகிறது என்று பார்த்துவிடலாம் என்கின்றனர் காவல்துறையினர்

ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல் நம் அரசியல்வாதிகள் புதுமையாக ஏதாவது யோசித்து வைத்திருப்பார்கள். இந்த இடைத்தேர்தலை பணம் கொடுக்கல் வாங்கல் இல்லா தேர்தலாக தேர்தல் ஆணையம் மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்