அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: வெளியே வந்தால் கைது என எச்சரிக்கை

ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (07:47 IST)
அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு
கொரோனா வரைஸ் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் புதன் கிழமை இரவு 9 மணி வரையிலான முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதேபோல, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளிலும் இன்று காலை 6 மணி முதல் செவ்வாய் இரவு 9 மணி வரையிலான ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முழு ஊரங்கின்போது ஒருசில நிபந்தனைகளுடன் காய்கறி கடைகள் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காய்கறி கடைகளும் திறக்கக்கூடாது என்றும், நடமாடும் வாகனங்கள் மூலமாக மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
இருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மருந்து கடைகள் இயங்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி இந்த அளவுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தபோதிலும் இன்று காலை சென்னை மக்கள் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்க வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்