தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பில் ‘ஆவின்’ பால் நிறுவனம் இயங்கும் என அறிவித்துள்ளது. மற்ற தனியார் பால் நிறுவனங்களான ஆரோக்யா, ஹட்ஸன் நிறுவனங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.