வீரப்பன் மகள் வாக்களிக்க வந்த போது பாமகவினர் வாக்குவாதம்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (10:16 IST)
கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி வாக்களிக்க வந்த போது பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சேலம் மேட்டூர் அருகே இன்று காலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி தனது ஆதரவாளர்களுடன் வாக்களிக்க வந்தார். அப்போது வித்யா ராணி உடன் அவரது ஆதரவாளர்களும் வாக்குச்சாவடிக்குள் வந்ததை அடுத்து பாமக பிரமுகர் கோவிந்தன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்

இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து வித்யா ராணியை மட்டும் உள்ளே வாக்களிக்க அனுமதித்தனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கோபிநாத், அதிமுக வேட்பாளராக ஜெயபிரகாஷ் மற்றும் பாஜக வேட்பாளராக நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்