தமிழக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்'' என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை ஆர்.எம்.வீரப்பன் அவர்களைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது.அந்த அளவுக்கு தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர். தந்தைப் பெரியாரில்தொடங்கி ஜெயலலிதா வரையிலான திராவிட இயக்கத் தலைவர்களின் அன்பைப் பெற்றவர்.
எம்.ஜி.ஆர்., ஜானகி இராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்றுஅரசு நிர்வாகத்திற்கு பங்களித்தவர். 35 ஆண்டுகளாக எனக்கு நண்பர். என்னை அழைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். என் மீது அன்பும், பற்றும் கொண்ட மூத்த தலைவர்.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், எம்.ஜி.ஆர்கழகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.