சீமான் கல்யாண போட்டோவை காட்டிய வீரலட்சுமி.. என் கட்சியை பார்த்து பொறாமை..!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:39 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வீரலட்சுமி பேசி வருகிறார். 
 
இந்த நிலையில் விஜயலட்சுமியை நான் திருமணம் செய்திருந்தால் ஒரு புகைப்படத்தை வெளியிடட்டும் என சீமான் தெரிவித்த நிலையில் தற்போது வீரலட்சுமி சீமானின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 
 
தன்னை சீமான் திருமணத்திற்கு வருமாறு அழைத்ததாகவும் திருமணத்தில் தான் கலந்து கொண்டு பிரபாகரன் புகைப்படத்தை பரிசாக கொடுத்ததாகவும் கூறிய வீரலட்சுமி அது குறித்த புகைப்படத்தையும் தனது மொபைல் ஃபோனின் பதிவு செய்யப்பட்டுள்ளது காண்பித்துள்ளார்.  
 
மேலும் சீமானுக்கு தனது கட்சியை பார்த்து பொறாமை என்றும் என்னுடைய கட்சியை விட நாம் தமிழர் கட்சி ஒரு படி கீழே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்  
 
வீரலட்சுமி இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்